இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு

நாமக்கல்:குறவர் சமுதாய மக்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, குறிஞ்சியார் முன்னேற்ற பேரவை மாநில தலைவர் சந்திரசேகரன் தலைமையில், நாமக்கல் கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: ராசிபுரம், ஆண்டகலுார் கேட், கவுண்டம்பாளைம், குருசாமி

பாளையம், அணைப்பாளையம், பாலப்பாளையம் உள்ளிட்ட வனப்
பகுதி ஓரத்தில், வாடகை வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்த வீடோ, நிலமோ இல்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அணைப்பாளையம், 85.குமாரபாளையம், சிங்களாந்தபுரம் பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஏதேனும் ஒரு இடத்தில், எங்கள் சமுதாயத்தை சேர்ந்த, 60 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், அரசின் பல்வேறு திட்டங்கள் கிடைக்கவும், மாணவ, மாணவியருக்கு சலுகைகள் கிடைக்கவும் மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement