நெடுஞ்சாலைத்துறையில்உள் தணிக்கை குழு ஆய்வு
ராசிபுரம்:தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறையில், பல்வேறு திட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், உள் தணிக்கை குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் முடிவுற்ற பணிகளை, பாலங்கள் பராமரிப்பு துறையை சேர்ந்த சென்னை கண்காணிப்பு பொறியாளர் சாந்தி தலைமையில், சேலம் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கோட்ட பொறியாளர் நடராஜன், உதவி பொறியா
ளர்கள் மலர்விழி, பிரவீன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.ராசிபுரம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில், ராசிபுரத்தில் இருந்து ஆத்துார் செல்லும் சாலையில் காக்காவேரி மற்றும் சீராப்பள்ளியில் சாலை
அகலப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். இதில், சாலையின் தரம், கனம் சரிபார்க்கப்பட்டது. நாமக்கல் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறையின் கோட்ட பொறியாளர் திருகுணா, தரக்கட்டுப்பாடு துறை உதவி கோட்ட பொறியாளர் தமிழரசி உள்பட பலர் உடனிருந்தனர்.
மேலும்
-
23 முதல் மணல் லாரிகள் ஓடாது உரிமையாளர்கள் அறிவிப்பு
-
வன கிராம மக்கள் உதவியுடன் நக்சலைட் வேட்டை
-
பயங்கரவாதிகளுக்கு உதவிய இளைஞர்; விசாரித்தபோது ஆற்றில் குதித்து பலி
-
தடை செய்யப்பட்ட 'பி.எஸ்., 4' வாகனம் பதிவு செய்த அதிகாரிகள் மீது வழக்கு
-
பொறுப்பு சார்-பதிவாளர்களுக்கு கிடுக்கி போடுகிறது பதிவுத்துறை
-
கொள்முதல் செய்த நெல்லுக்கு ரூ.250 கோடி பாக்கி; விவசாயிகள் தவிப்பு