பஞ்சாயத்து செயலர் மாற்றம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

எருமப்பட்டி:
எருமப்பட்டி யூனியன், செவ்வந்திப்பட்டி பஞ்., செயலாளராக பணிபுரிந்து வந்தவர் செந்தில்; இவரை, சில தினங்களுக்கு முன் இடமாற்றம்
செய்தனர்.

பின், வடவத்துார் பஞ்., செயலாளராக இருந்த மந்திரி என்பவரை, செவ்வந்திப்பட்டி பஞ்., செயலாளராக மாற்றம் ‍செய்யப்பட்டார். இந்நிலையில், பஞ்., செயலாளர் மந்திரி மீது பல்வேறு புகார்கள் தெரிவித்து, நேற்று செவ்வந்திப்பட்டி பொதுமக்கள், 200க்கும் மேற்பட்டோர் பஞ்., அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, எம்.மேட்டுப்பட்டி பஞ்., செயலாளராக உள்ள சுப்பரமணியத்தை, செவ்வந்திப்பட்டிக்கு மாற்றினர்.


மந்திரியை மீண்டும் வடவத்துார் பஞ்., செயலாளராகவே மாற்றி, பி.டி.ஓ., உத்தரவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement