சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் குறித்து அறிவிக்க வேண்டும்: வானதி

கோவை; ''தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்கள் குறித்து, தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

காஷ்மீரை, பா.ஜ., அரசு ஒரு சுற்றுலாதலமாக்கி, வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வதை பொறுக்க முடியாமல், பயங்கரவாத தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர். இந்த பயங்கரவாதிகளுக்கு, பதிலடி கொடுக்க, பிரதமர் மோடி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். நம் நாட்டில், ஹிந்துக்கள் அதிகமாக உள்ளதால்தான், ஜனநாயகம் இருக்கிறது. தமிழகத்தில், மத பயங்கரவாதம் இல்லை என, முதலமைச்சர் ஸ்டாலின் மக்களிடம் பொய் சொல்கிறார். தமிழகத்தில், சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்கள் குறித்து தமிழக அரசு, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement