நாளை மாநில கபடி போட்டி

நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டை அடுத்த அரியாகவுண்டம்பட்டியில், இளையவர் சடுகுடு கிளப் சார்பில், நாளை 65ம் ஆண்டு தென்னிந்திய ஆண்கள் கபடி போட்டி நடக்கிறது. இரண்டு நாட்கள், பகல், இரவு ஆட்டமாக இப்போட்டி நடக்கிறது. அரியாகவுண்டம்பட்டி ராமசாமி நினைவு திடலில் போட்டி நடக்கிறது. வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கப்பரிசு, 65,000 ரூபாய், 45,000 ரூபாய், 25,000 ரூபாய் மற்றும் கோப்பை வழங்கப்படவுள்ளது.

போட்டியில், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து போலீஸ் அணி, ரயில்வே அணி, பல்கலை அணி என, 40-க்கும் மேற்பட்ட அணிகள் பதிவு செய்துள்ளன. ஏற்பாடுகளை, இளையவர் சடுகுடு கிளப் அறக்கட்டளை தலைவர் மணி, செயலாளர் அருள், பொருளாளர் நடேசன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Advertisement