'சுடுகாடு நிலம் ஆக்கிரமிப்பு'



ஈரோடு:பெருந்துறை தாலுகா தாளக்கரை புதுாரை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது: தாளக்கரை புதுாரில் ஊருக்கு சொந்தமான சுடுகாடு, இடுகாடு பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. அதனை ஒட்டிய பகுதியில் உள்ள சிலர், தங்களது பூர்வீக சொத்து எனக்கூறி, சுடுகாடு, இடுகாடு உள்ள, 28 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து கொண்டனர்.

தங்களது நிலத்துடன் இணைத்து கொள்ளும் வகையில் இயந்திரங்கள் மூலம் ஒன்றாக சேர்த்து நிரவிவிட்டனர்.


வருவாய் துறை, கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்ததில், நில அளவீடு நடந்தது. இதில் சுடுகாடு, இடுகாட்டுக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதற்கிடையில் இது நெடுஞ்சாலை துறை புறம்போக்கு என நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, அவ்விடத்தை நாங்கள் பயன்படுத்த இயலாமல் செய்தனர். மாவட்ட நிர்வாகம் விசாரித்து பயன்பாட்டில் உள்ள சுடுகாடு, இடுகாட்டுக்கு நிலத்தை மீண்டும் ஒதுக்கீடு செய்து, முறையாக வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Advertisement