பட்டா மாற்றத்தில்தொடரும் ஏமாற்றம்



ஈரோடு:ஈரோடு, காசிபாளையம், ரங்கம் பாளையம், அன்னை சத்யா நகர், இரணியன் வீதி பகுதி, 1, 2, 3 பொதுமக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது: காசிபாளையத்தில், புல எண்-584, 598 ஆகியவை நத்தம் வகைப்பாடு செய்து, டி.ஆர்.ஓ.,வால் உட்பிரிவு செய்யப்பட்டது.
பின், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு நில மாற்றம் செய்யப்பட்டு, குடிசை மாற்றுவாரியம் மூலம் பட்டா வழங்கப்பட்டது. அவ்வாறு உட்பிரிவு செய்து, 21 ஆண்டுகளாகிறது. நாங்கள் அங்கு, 40 ஆண்டாக வசித்தும், எங்கள் பெயருக்கு பட்டாவை மாற்றம் செய்ய முடியாமல், அரசின் கணினி தமிழ் நிலம் பதிவேற்ற தளத்தில், 'அரசு நிலம்' என்றே உள்ளது. இதனால் நாங்கள் வீடு கட்ட, கடன் பெற முடியவில்லை. விரைவில் எங்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தர வேண்டும். இவ்வாறு கூறினர்.

Advertisement