தமிழிசைக்கு குளிர் ஜுரம் வரப்போகிறது

5

'தமிழகத்தை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படவில்லை என்றால், பின்விளைவுகளை முதல்வர் சந்திக்க நேரிடும்' என்று தமிழிசை கூறியுள்ளார். அப்படியென்றால், அவர் என்ன செய்யப்போகிறார். அவரே துப்பாக்கி ஏந்தப் போகிறாரா?

தமிழகம் இனம், மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட பூமி. பயங்கரவாதத்திற்கு, எப்போதும் முதல்வர் துணைபோக மாட்டார்; இரும்புக்கரம் கொண்டு அடக்குவார்.

அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில், இதுபோன்ற விஷ விதைகளை விதைக்க முற்படுபவர்களுக்கு, தமிழகம் துளியும் இடம் தராது.

இங்கு முஸ்லிம்கள், ஹிந்துக்கள் ஒன்றாக உள்ளனர். இனம், மொழியால் பிளவு ஏற்படுத்தி, தேர்தல் நேரத்தில் குளிர் காயலாம் என்று, முன்னாள் கவர்னர் தமிழிசை நினைக்கிறார்.

அவருக்குத்தான் குளிர் ஜுரம் வருமே தவிர, வேறு எதுவும் கிடைக்காது.

- சேகர்பாபு,

தமிழக அமைச்சர்

Advertisement