தந்தை கொலைக்கு பழிவாங்க தாய்மாமனை கொன்ற மருமகன்
ராமமூர்த்தி நகர்: தந்தை கொலைக்கு பழிக்கு பழியாக தாய்மாமனை வெட்டிக் கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு, டி.ஜே.ஹள்ளியை சேர்ந்தவர் அன்சார் பாஷா. இவரது மனைவி சரயு. இவர்கள் மகன் பஹத், 20. கடந்த 2010ம் ஆண்டு குடும்ப தகராறில் அன்சார் பாஷாவை, சரயுவின் அண்ணன் சிராஜுதின், 42, வெட்டிக் கொலை செய்தார்.
இந்த வழக்கில் கைதான சிராஜுதின், பத்து ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு, 2020ல் வெளியே வந்தார். அதற்கு பின் டின் பேக்டரி பகுதியில் வசித்தார். ஹோட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்தார்.
நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து, ஹோட்டலில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை இரண்டு பைக்கில் வந்த நான்கு வாலிபர்கள், அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.
உயிருக்கு போராடியவரை அப்பகுதி மக்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
ராமமூர்த்திநகர் போலீசார் நடத்திய விசாரணையில், சிராஜுதினை, அவரது தங்கை சரயுவின் மகன் பஹத், அவரது நண்பர்கள் சர்புதீன், 20, தவுசித், 20, இர்ஷாத், 20, ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.
நான்கு பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். தந்தை கொலைக்கு பழிவாங்க சிராஜுதினை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக பஹத், போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும்
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
-
சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
-
அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்