முதியோர் உதவித் தொகை வழங்குவது எப்போது? பயனாளிகள் எதிர்பார்ப்பு

கடலுார் ; கடலுார் மாவட்டத்தில் முதியோர், விதவை உதவி தொகைக்கு புதியதாக விண்ணப்பித்தவர்களுக்கு பணம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வருவாய்த்துறை சார்பில், சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் முதியோர், விதவை, முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படு கிறது.
இத்திட்டத்தில் மாநிலம் முழுதும் 30 லட்சத்திற்கும் மேற்பட் டோர் பயனடைகின்றனர். பயனாளிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வந்தது.
2023ம் ஆண்டு செப்., மாதத்தில் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் துவங்கப்பட்டது.
பின், சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை மாற்றுத்திறனாளிகளுக்கு 1,500 ரூபாயாகவும், மற்றவர்களுக்கு 1,200 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.
உதவித்தொகை உயர்த்தப்பட்ட பின் புதியதாக விண்ணப்பித்தவர்களுக்கு, உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், உதவித்தொகை வழங்கவில்லை. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் 2024 அக்., மாதம் வரை உதவித் தொகை வழங்கப்பட்டது.
மற்றவர்கள் ஆணையை கையில் வைத்துக் கொண்டு,2 ஆண்டுகளாக தாலுகா அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர்.
தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.34 கோடி பயனடைந்து வருகின்றனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் மாதம் முதல் விடுபட்டவர்களும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
மேலும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் தொகையை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கடலுார் மாவட்டத்தில் மற்ற உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்கள் கூட மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து பெறுவதில் ஆர்வம் காட்டக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, ஏழை, எளிய மக்களுக்கு பெரும் உதவியாக இருந்த சமூகபாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை நிறுத்தாமல் பயனாளிகளுக்கு நிதியை விடுவிக்க வேண்டும் என பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், '2023 ஜூன் மாதம் முதல் புதியதாக விண்ணப்பித்தவர் களுக்கு ஆணை வழங்கப்பட்டது.
ஆனால் உதவித்தொகை வழங்கவில்லை. நிதி நிலைமை சரியானதும் வழங்கப்படும் என, அரசுதெரிவித்துள்ளது.
கடலுார் மாவட்டத்தில் விண்ணப்பித்த சுமார் 6,000த்திற்கும் மேற்பட்டோர் உதவித்தொகை கிடைக்காமல் 22 மாதங்களாக அலைக்கழிக்கப்படுகின்றனர்.
கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது' என்றார்.
மேலும்
-
தமிழகத்தில் நாளை போர்க்கால ஒத்திகை: 4 இடங்களை தேர்வு செய்த மத்திய அரசு
-
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு முழு ஆதரவு: அமெரிக்க சபாநாயகர் அறிவிப்பு
-
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா.,வில் கடும் கண்டனம்; பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் சரமாரி கேள்வி
-
12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; மே 8ல் வெளியாகும் என அறிவிப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்பு