கடிதம் எழுதி வைத்து மாணவன் மாயம்

பல்லடம்; 'நீட்' தேர்வு எழுதிய மாணவர், 'கட்டாயம் மருத்துவர் ஆவேன்' என கடிதம் எழுதிவைத்துவிட்டு, வீட்டில் இருந்து மாயமானார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த சித்தம்பலம்புதுாரை சேர்ந்தவர் தனபால், 45; விசைத்தறி உரிமையாளர். இவரது 18 வயது மகன், அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். கடந்த ஆண்டு 'நீட்' தேர்வு எழுதினார். தேர்வு பெற முடியவில்லை. நேற்று முன்தினம் நடந்த 'நீட்' தேர்வையும் எழுதினார். இந்நிலையில், ''எனக்கு எல்லா விதத்திலும் சுதந்திரம் கொடுத்தீர்கள்; நான் கல்வி ஆவணங்கள் அனைத்தையும் எடுத்து செல்கிறேன்.

நீங்கள் தவறான முடிவு எதுவும் எடுக்க வேண்டாம். கட்டாயம் நான் மருத்துவர் ஆகி உங்கள் ஆசையை நிறைவேற்றுவேன்'' என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு, வீட்டில் இருந்து மாயமானார். கடிதத்தை கைப்பற்றிய பல்லடம் போலீசார், அவரை தேடி வருகின்றனர்.

Advertisement