நாங்கள் தான் விபத்தை ஏற்படுத்தி விட்டோம் என்று கூறுவது ஏற்புடையதல்ல: மதுரை ஆதீனம்
மதுரை : சென்னை சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க, மே 2ல் சென்ற போது, உளுந்துார்பேட்டையில் காரை மோத செய்து, தன்னை கொல்ல சதி நடந்ததாக மதுரை ஆதீனம் குற்றஞ்சாட்டிய நிலையில், கண்காணிப்பு கேமரா காட்சிகளை வெளியிட்டு, போலீஸ் மறுப்பு தெரிவித்தது. இதற்கு ஆதீனம், தன் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
உளுந்துார்பேட்டையில் நடந்த கார் விபத்து தொடர்பாக, மதுரை ஆதீனம் தரப்பில் எந்த புகாரும் கொடுக்கவில்லை என, போலீஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த அடுத்த நிமிடமே காலை 9:42 மணிக்கு, காவல் கட்டுப்பாட்டு அறை எண், '100'க்கு தகவல் தெரிவித்தோம். அதன்பின், காலை 10:09க்கு உளவுப்பிரிவு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காலை 11:47 மணி முதல் உள்ளூர் எஸ்.ஐ.,யிடம் பலமுறை பேசினோம்.
மாலை 5:39 மணிக்கு உளவுத்துறை டி.எஸ்.பி., எங்களை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து கேட்டார்; நடந்ததை விவரித்தோம்.
சேலம் - சென்னை சாலையில் தற்காலிக தடுப்புகள் இருந்தும் கூட, மிக வேகமாக வந்து எங்கள் வாகனத்தின் மீது, மாருதி காரின் மீது மோதியது. நாங்கள் பார்க்கும் போது, அந்த வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லை. காருக்குள், இரு இஸ்லாமியர்கள் இருந்தனர். போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என்பதை அறிந்து அங்கிருந்து சென்று விட்டனர்.
போலீசார், மே 3ல் வெளியிட்ட அறிக்கையில், எங்களை பற்றியும், எங்கள் தரப்பு வாகனம் பற்றியும் முழு விபரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால், எதிர்தரப்பு வாகனம், தடுப்புகளை தாண்டி, எங்கள் வாகனத்தின் மீது மோதியது குறித்து எந்த விபரமும் இல்லை. பதிவு இல்லாத வாகனம் அது என்று நாங்கள் குறிப்பிட்ட விஷயத்தையும், முழுமையாக மறைத்துள்ளனர்.
நடந்ததை போலீசுக்கு முழுமையாக தெரிவித்த பின்பும், முழு தவறும் மதுரை ஆதீனம் பக்கம் தான் இருக்கிறது என்பது போன்ற தோற்றத்தை போலீஸ் அறிக்கை உருவாக்கியுள்ளது வேதனை அளிக்கிறது. போலீஸ் அறிக்கை, ஒரு சார்புடையதாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆதீனம் சென்ற காரில் உரசிய மாருதி கார் டிரைவரான கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முபாரக் அலி, 37; மதுரை ஆதீனத்தின் கார் டிரைவர், போக்குவரத்து விதிமுறைகளை மீறி அஜாக்கிரதையாக காரை ஓட்டிச் சென்றதாக, உளுந்துார்பேட்டை போலீசில் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தார்.அதன்படி உளுந்துார்பேட்டை போலீசார், மதுரை ஆதீனம் சென்ற கார் டிரைவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
-
தமிழகத்தில் நாளை போர்க்கால ஒத்திகை: 4 இடங்களை தேர்வு செய்த மத்திய அரசு
-
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு முழு ஆதரவு: அமெரிக்க சபாநாயகர் அறிவிப்பு
-
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா.,வில் கடும் கண்டனம்; பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் சரமாரி கேள்வி
-
12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; மே 8ல் வெளியாகும் என அறிவிப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்பு