ரேஷன் அரிசி கடத்தல்: 3பேர் கைது

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் 6.5 டன் ரேஷன் அரிசி கடத்திய அஸ்வின் போஸ் 28, சாமுவேல் 25, மயூரான் 39, ஆகியோரை குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குளத்தில் அரசு சிமென்ட் ஆலைக்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்குள்ள முட்புதர்களுக்குள் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார், அங்கு தார்ப்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டிருந்த 6500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

கடத்தலில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த அஸ்வின் போஸ், துாத்துக்குடியைச் சேர்ந்த சாமுவேல், திருநெல்வேலியை சேர்ந்த மயூரானை கைது செய்து கார், டூவீலரை பறிமுதல் செய்தனர். கடத்தலில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

Advertisement