மின்னல், பலத்த காற்றுடன் மழை: குஜராத்தில் 14 பேர் உயிரிழப்பு

ஆமதாபாத்: குஜராத்தின் பல பகுதிகளில் மழை, பலத்த காற்று, மின்னல் மற்றும் புழுதிப் புயல் காரணமாக , 14 பேர் உயிரிழந்தனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த சில நாட்களுக்கு குஜராத் மாநிலம் முழுவதும் இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று கணித்துள்ளது. மாநிலத்தில் ஏற்கனவே பலத்த காற்றுடன் பல பகுதிகளில் மழை பெய்தது.
இது குறித்து எஸ்.இ.ஓ.சி., எனப்படும் மாநில அவசரகால செயல்பாட்டு மைய அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் உள்ள 253 தாலுகாக்களில் 168 இடங்களில் பருவம் தவறிய மழை பெய்துள்ளது, கேடா, காந்திநகர், மெஹ்சானா மற்றும் வதோதரா மாவட்டங்களில் 25 முதல் 40 மி.மீ மழை பெய்துள்ளது.
குஜராத்தின் அகமதாபாத், ஆனந்த், கேடா, தஹோத், ஆரவல்லி மற்றும் வதோதரா மாவட்டங்களில் நேற்று மின்னல், மின்சாரம் பாய்தல், மரங்கள், வீடுகள் மற்றும் விளம்பர பலகைகள் இடிந்து விழுந்தது போன்ற மழை தொடர்பான சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர், நேற்று முன்தினம் ஆமதாபாத்தின் விராம்காமில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
கேடா மாவட்டத்தில் நான்கு பேர், வதோதராவில் மூன்று பேர், அகமதாபாத், தாஹோத் மற்றும் ஆரவல்லியில் தலா இரண்டு பேர் மற்றும் ஆனந்த் மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
வாசகர் கருத்து (1)
thehindu - ,இந்தியா
06 மே,2025 - 17:14 Report Abuse

0
0
Reply
மேலும்
-
4 மாதங்களுக்கு முடிக்கப்பட்ட பணிகளுக்கு மீண்டும் டெண்டர்: சென்னை மாநகராட்சி பெண் அதிகாரி சஸ்பெண்ட்
-
ராமநாதபுரம் அருகே எரிவாயுக்குழாயில் உடைப்பு: கசிவு சரி செய்யும் பணி தீவிரம்
-
திருடப்பட்ட தொன்மை வாய்ந்த கண்ணப்பநாயனார் சிலை: நெதர்லாந்து ஏலத்தில் தடுத்து நிறுத்தம்!
-
சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டு சிறை
-
இந்திய-பாக்., எல்லையில் 2 நாள் போர் பயிற்சி: இந்திய விமானப்படை அறிவிப்பு
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்; மும்பை அணி பேட்டிங்
Advertisement
Advertisement