ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த ஆபரண தங்கம் விலை

1

சென்னை: ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறை உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600ம் , ஒரு கிராம் ரூ.75ம் உயர்வை சந்தித்துள்ளன.

சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தங்கத்தின் விலை ஏறிக் கொண்டே செல்கிறது. ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,200 ஆகவும், கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,025 ஆகவும் விற்பனை ஆனது.

இந்நிலையில், இன்று மாலை , தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து 7 2,800 ரூபாய்க்குவிற்பனை ஆனது. அதேபோல், கிராம் தங்கம் ரூ.75 உயர்ந்து ரூ.9,100 ஆக விற்பனை ஆனது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்வால், ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்துள்ளது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement