தீவிரவாத தாக்குதலை கண்டித்து பா.ஜ., போராட்டம்

சூலுார்: காஷ்மீர் பஹல்காமில், சுற்றுலா பயணிகளை சுட்டு கொன்ற, பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, சூலுாரில் பா.ஜ., வினர் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
காஷ்மீர் பஹல்காம் பகுதியில், 26 சுற்றுலா பயணிகளை, பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்தும், தமிழகத்தில் உள்ள பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாட்டினரை வெளியேற்ற வலியுறுத்தியும், கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் சூலுாரில் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது.
கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் வசந்த ராஜன், மாவட்ட நிர்வாகிகள் கோபால்சாமி, சத்தியமூர்த்தி, சிதம்பரம் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.
நிர்வாகிகள் பேசுகையில்,' தீவிரவாதிகள் திட்டமிட்டு, 26 அப்பாவி பொதுமக்களை சுட்டு கொலை செய்தது கண்டிக்கத்தக்கது. அக்கொடியவர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை கொடுக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அவர்களுக்கு உதவியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாட்டினரை கண்டறிந்து, உடனடியாக வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
மேலும்
-
மிகுந்த நிதானத்துடன் துல்லியமாக நடந்த இந்திய ராணுவ தாக்குதல்
-
இந்தியாவுக்கு தக்க பதிலடி தரப்படும்: பாகிஸ்தான்
-
பாகிஸ்தானை ஏமாற்றி .. இரவோடு இரவாக நம் ராணுவம் 'அட்டாக்'
-
‛ஆபரேஷன் சிந்தூர்' இன்று காலை 10 மணிக்கு இந்திய ராணுவம் முழு விளக்கம்
-
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் தணியும்: டிரம்ப் நம்பிக்கை
-
உரிமை கோராத உடல்களை அடக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளாட்சிகளுக்கு ஆணையம் பரிந்துரை