இங்கிலாந்து தொடரில் சுதர்சன், குல்தீப் * தேர்வுக்குழு முன்னாள் தலைவர் கணிப்பு

புதுடில்லி: ''இங்கிலாந்து தொடரில் சாய் சுதர்சன், குல்தீப் யாதவ் கட்டாயம் இடம் பெற வேண்டும்,'' என தேர்வுக்குழு முன்னாள் தலைவர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் ஜூன் 20-24ல் லீட்சில் நடக்கும். அடுத்த நான்கு போட்டிகள் பர்மிங்காம் (ஜூலை 2-6), லார்ட்ஸ் (ஜூலை 10-14), மான்செஸ்டர் (ஜூலை 23-27), ஓவலில் (ஜூலை 31-ஆக. 4) நடக்க உள்ளன.
இதுகுறித்து இந்திய தேர்வுக்குழு முன்னாள் தலைவர் பிரசாத் கூறியது:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அடுத்த சீசன் துவங்குகிறது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சாய் சுதர்சன் இடம் பெற, இது தான் சரியான நேரம். ஒருவேளை ரோகித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டால், ஜெய்ஸ்வால் அல்லது சுதர்சனுடன் இணைந்து அணிக்கு துவக்கம் தரலாம். இதை தேர்வாளர்கள் முடிவு செய்வர். இத்தொடரில் சுதர்சனுக்கு கட்டாயம் வாய்ப்பு தர வேண்டும்.
தவிர சுப்மன் கில், ராகுல் என மூன்றுவித கிரிக்கெட்டிலும் பங்கேற்கும் வீரர்கள் உள்ளனர். இதனால் 'டி-20', ஒருநாள் அரங்கில் ஷ்ரேயாஸ் சிறப்பாக செயல்பட்டாலும், டெஸ்டில் இவரை தேர்வு செய்ய மாட்டேன்.
சுழலில் ஜடேஜா, குல்தீப்புடன், வாஷிங்டன் சுந்தர் கூட்டணி தேர்வாக வேண்டும். வாஷிங்டன் ஆல் ரவுண்டர் என்பதால் 'மேட்ச் வின்னராக' இருப்பார். அக்சர் படேலுக்கு இடம் இல்லை.
இங்கிலாந்து ஆடுகளங்களுக்கு நிதிஷ் குமார் பொருத்தமான தேர்வாக இருப்பார். வேகப்பந்து வீச்சில் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜுடன், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் இடம் பெற வேண்டும். 'டி-20'ல் 100 விக்கெட் சாய்த்துள்ளதால் அர்ஷ்தீப், டெஸ்டின் சூழல் உணர்ந்து பவுலிங் செய்யலாம். தவிர கவுன்டி போட்டிகளில் பங்கேற்ற அனுபவமும் உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் திருவள்ளூரில் சிறுவர்கள் உற்சாகம்
-
பூண்டி நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து மீனவர் பலி
-
ரூ.1.40 லட்சத்தில் சீரமைத்தும் வீண் நுாலகர், புத்தகங்கள் இல்லாத அவலம்
-
பரிதாப நிலையில் தண்ணீர் பந்தல் பானை இருக்கு... தண்ணீர் எங்கே?
-
கலெக்டர் அலுவலகத்தில் குரங்குகள் அட்டகாசம்
-
சேதமான நிழற்குடை: அச்சத்தில் பயணியர்