சேதமான நிழற்குடை: அச்சத்தில் பயணியர்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் பஜார் பகுதியில் பயணியர் நிழற்குடை அமைந்துள்ளது. இப்பகுதிவாசிகள் திருவள்ளூர், திருத்தணி, திருவாலங்காடு, சென்னை, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, இந்த பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிழற்குடை, ஆங்காங்கே விரிசல் விட்டு, கூரையின் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து வருவதால், நிழற்குடையை பயன்படுத்த பயணியர் அச்சப்படுகின்றனர். மேலும் வெயில், மழைக்கு ஒதுங்க கூட பயன்படாத நிழற்குடையாக மாறி வருகிறது.
எனவே, சேதமடைந்த நிழற்குடையை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி; காஷ்மீர் மக்கள் கொண்டாட்டம்!
-
பெருமை தரும் ஆபரேஷன் சிந்தூர்: பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் பிரதமருக்கு நன்றி
-
‛ஆபரேஷன் சிந்தூர்' பெயர் ஏன்?
-
பாகிஸ்தானுக்கு நெத்தியடி கொடுத்த இந்திய ராணுவம்; ஆபரேசன் சிந்தூர் குறித்து நிபுணர்கள் கருத்து
-
பக்தர்கள் புகார் அளிக்க ஏற்பாடு
-
மாடியில் இருந்து குதித்த பெண் பலி
Advertisement
Advertisement