ரூ.1.40 லட்சத்தில் சீரமைத்தும் வீண் நுாலகர், புத்தகங்கள் இல்லாத அவலம்

வயலுார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது வயலுார் ஊராட்சி. இங்குள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கிளை நுாலகம் அமைக்கப்பட்டது.

இந்த நூலகம் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து இருந்தது.

கடந்த 2022ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 1.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஊரக வளர்ச்சி நிதியின் கீழ் சீரமைக்கப்பட்டது.

இந்த நுாலகம் சீரமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும், நுாலகர் மற்றும் புத்தகங்கள் இல்லாததால், வாசகர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். கிளை நுாலகத்தில் உள்ள சில புத்தகங்களும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. மேலும், வாசகர்கள் அமர நாற்காலி, டேபிள் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, கிளை நுாலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நுாலக வாசகர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement