குடிபோதையில் காரிலேயே இறந்த ஓட்டுனர்
மூவரசம்பட்டு,
மூவசரம்பட்டு பகுதியில், காரில் மயங்கிய நிலையில் ஒருவர் இருப்பதாக, போலீசாருக்கு நேற்று இரவு தகவல் வந்தது. அங்கு விரைந்த போலீசார், காரின் கதவை திறந்து பார்த்தபோது, அந்த நபர் இறந்து கிடந்தார்.
அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இறந்தது கார்த்திக்பெருமாள், 39, என்பது தெரிந்தது.
துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இவர், மூவரசம்பட்டு பகுதியில் தங்கி, வாடகை கார் ஓட்டி வந்துள்ளார்.
அளவுக்கு அதிகமான குடிபோதையில், நாக்கு வறண்டு இறந்து போனது தெரியவந்தது. இது குறித்து, பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பூண்டி நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து மீனவர் பலி
-
ரூ.1.40 லட்சத்தில் சீரமைத்தும் வீண் நுாலகர், புத்தகங்கள் இல்லாத அவலம்
-
பரிதாப நிலையில் தண்ணீர் பந்தல் பானை இருக்கு... தண்ணீர் எங்கே?
-
கலெக்டர் அலுவலகத்தில் குரங்குகள் அட்டகாசம்
-
சேதமான நிழற்குடை: அச்சத்தில் பயணியர்
-
மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்கு புதிய கட்டடங்கள்
Advertisement
Advertisement