மின் வினியோகம் பாதிக்காது

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில், மத்திய அரசின் இந்திய அணுமின் கழகத்திற்கு சொந்தமான சென்னை அணுமின் நிலையம் உள்ளது.

அங்கு தலா, 220 மெகா வாட் திறனில், இரு அணு உலைகள் உள்ளன. அவற்றில் இருந்து, தமிழகத்திற்கு தினமும், 330 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று, நாடு முழுதும் பாதுகாப்பு ஒத்திகை நடக்கிறது. தமிழகத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையம் உட்பட இரண்டு இடங்களில், பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பாதுகாப்பு ஒத்திகை தொடர்பாக, மத்திய அரசின் அனைத்து அறிவுறுத்தல்களும் முழுதுமாக கடைபிடிக்கப்படும். பாதுகாப்பு ஒத்திகைக்காக, மற்ற மாநிலங்களில் மின் வினியோகம் நிறுத்தலாம். தமிழகத்தில் வாய்ப்புகள் இருக்காது' என்றார்.

Advertisement