கஞ்சா விற்ற நால்வர் கைது

புளியந்தோப்பு,
ஓட்டேரியில் நேற்று முன்தினம் இரவு சந்தேகப்படும்படி வந்த மூவரை போலீசார் சோதனையிட்டனர். அவர்களிடம் 250 கிராம் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் பால் இக்னேசியஸ் என்பவர் வீட்டில் சோதனையிட்டதில் மேலும், 350 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

அவர் அளித்த தகவலின்படி, மதுரவாயலில் தங்கியிருந்த சுரேஷ் என்பவரை பிடித்த போது, அவரிடம் 1.8 கிலோ கஞ்சா இருந்தது கண்டறிந்து கைப்பற்றப்பட்டது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மொத்தம், 50,000 ரூபாய் மதிப்புள்ள 2.400 கிலோ கஞ்சா, இரண்டு பைக், எடை போடும் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, ஓட்டேரியை சேர்ந்த பால் இக்னேசியஸ், 30, கோபாலபுரத்தை சேர்ந்த அப்துல் சஹான்,28, அப்துல் ஆசிப், 23 மற்றும் சேப்பாக்கத்தை சேர்ந்த ராகுல், 23 ஆகிய நால்வரை கைது செய்தனர்.

Advertisement