மாநில அரசு வாயிலாக ஜாதிவாரி சர்வே வேண்டும்
கர்நாடகாவில், 2015ல் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின்படி, அங்கு பட்டியலினத்தில், 101 ஜாதிகள் இருப்பதும், அவர்களின் மக்கள்தொகை, 1.30 கோடி என்றும் தெரியவந்துள்ளது. ஆனாலும், உள் இடஒதுக்கீடு வழங்க, இத்தகவல்கள் போதுமானவை அல்ல என்பதால், பட்டியலினத்தவர்களுக்கு மட்டும், சிறப்பு ஜாதிவாரி சர்வேயை, கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது.
தேசிய அளவில், மத்திய அரசால் நடத்தப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்பில் கிடைக்கும் விபரங்கள், தேசிய அளவில் இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிப்பதற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். எனவே, தமிழகத்தில் அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூக நீதி வழங்க வசதியாக, மாநில அரசின் வாயிலாக ஜாதி வாரி சர்வே நடத்த முன்வர வேண்டும். மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பாகவே, இதை நடத்தி முடிக்க வேண்டும்.
அன்புமணி, தலைவர், பா.ம.க.,
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement