வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

வியாசர்பாடி, வியாசர்பாடி 20வது பிளாக்கைச் சேர்ந்தவர் பஷீர் அகமது, 44. இவர், சோபா, நாற்காலி பழுது நீக்கும் தொழில் செய்து வருகிறார்.

இவர், மீஞ்சூரில் உள்ள தன் வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். கடந்த 2ம் தேதி மதியம், மீஞ்சூர் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில், நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 35,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement