ஹோட்டல் அதிபர் வீட்டில் அமலாக்க துறை சோதனை
வேலுார்:வேலுாரில், ஹோட்டல் அதிபர் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வேலுார் மாவட்டம், தொண்டான்துளசியை சேர்ந்தவர் மேத்தா கிரி ரெட்டி. இவர், வேலுாரில், சாய் சுப்ரபாதம் ஹோட்டல், எய்ம் சிட்டி லேண்டு புரமோட்டர் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் உட்பட பல நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
நேற்று அதிகாலை சென்னையில் இருந்து அமலாக்கத் துறை அதிகாரிகள் ஐந்து பேர், காட்பாடி, காந்தி நகரில் உள்ள, மேத்தா கிரி ரெட்டி அலுவலகம், தொண்டான் துளசி கிராமத்தில் உள்ள அவரது வீடு ஆகியவற்றில், காலை, 7:00 முதல் மாலை, 4:00 மணி வரை சோதனை நடத்தினர்.
அப்போது, முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement