வேலியில் சிக்கிய கரடிக்குட்டி மீட்பு

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் மணிமுத்தாறு, 80 அடி கால்வாய் அருகே தனியார் மாந்தோப்பில் வேலியில் சிக்கியிருந்த ஒரு வயது பெண் கரடிக்குட்டியை, ஒரு மணி நேரத்திற்கு மேலாக வனத்துறையினர் போராடி பத்திரமாக வேலியில் இருந்து விடுவித்தனர்.

தொடர்ந்து அந்த கரடிக்குட்டி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.

Advertisement