நகை மதிப்பீடு தொழில்நுட்ப பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரி: புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீடு, தொழில்நுட்பங்கள் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மேலாண் இயக்குனர் மாறன் செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசு கூட்டுறவுத் துறையின் வழிகாட்டுதலின் படி, கூட்டுறவு மேலாண்மை நிலையமானது, பல்வேறு நீண்ட கால மற்றும் குறுகிய கால பட்டயம் மறறும் சான்றிதழ் வகுப்புகளை நடத்தி வருகிறது.
அதன்படி, நகை மதிப்பீடும் அதன் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் பயிற்சி வகுப்பு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 14 நாட்கள் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சியில் சேர்வதற்கு 8ம் வகுப்பு பயின்றவர்கள், பயிற்சி கட்டணமாக ரூ.6,500, தேர்வு கட்டணமாக ரூ.500 செலுத்தி சேர்ந்து கொள்ளலாம்.
பயிற்சியில் சேர வயது வரம்பு இல்லை. பயிற்சி முடித்தவர்கள் கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகள், நிதி நிறுவனங்கள், நகை கடைகளில் வேலை பெறுவதற்கு வாய்ப்புள்ளது. சொந்தமாகவும் தொழில் துவங்கலாம்.
பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்ப கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பித்தினை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு எண்: 62, சுய்ப்ரேன் வீதியில் உள்ள புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நேரிடையாகவும், 0413-2220105, 2331408 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் தணியும்: டிரம்ப் நம்பிக்கை
-
உரிமை கோராத உடல்களை அடக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளாட்சிகளுக்கு ஆணையம் பரிந்துரை
-
மாநில அரசு வாயிலாக ஜாதிவாரி சர்வே வேண்டும்
-
அங்கன்வாடிகளுக்கு 15 நாள் விடுமுறை
-
பிரசாரத்தில் ஆரத்தி எம்.எல்.ஏ., மீதான வழக்கு ரத்து
-
மழையில் குடை பிடித்து பூக்களை ரசித்த சுற்றுலா பயணிகள்