நாய்களை விஷம் வைத்து கொன்ற நபர்கள் மீது நடவடிக்கை தேவை

அரியாங்குப்பம்: தெரு நாய்களை விஷம் வைத்து கொன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், போலீசாரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு பொது மக்கள் வளர்த்த 4 நாய்கள் திடீரென இறந்து கிடந்தன.

இரவு நேரங்களில் வீடுகளுக்கு பாதுகாப்பாக இருந்த நாய்கள் இறந்த சம்பவம், அதனை வளர்த்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வீடுகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் நாய்கள், திருடர்களுக்கும், சமூக விரோத செயல்களின் ஈடுபடுவர்களுக்கும் இடையூறாக இருப்பதால், தெரு நாய்களை விஷம் வைத்து கொன்றுள்ளனர். என அப்பகுதியில் தெரு நாய்கள் வளர்ப்பவர்கள் கூறி வருகின்றனர். நாய்களுக்கு விஷம் வைக்கும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் போலீசாரிடம் வலியுறுத்தினர்.

அதே போல, அரியாங்குப்பம் மணவெளி பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், இரண்டு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டன. தெரு நாய்களுக்கு விஷம் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விலங்குகள் சமூக நல ஆர்வலர்கள் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement