1,609 நெசவாளர்களுக்கு ரூ.15.8 கோடி மானிய கடன்

உத்திரமேரூர்:காஞ்சிபுரம் சரகத்தில் 74 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அதில், 56 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. மீதமுள்ள 18 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயலிழந்தும் உள்ளன.

இந்த நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின்கீழ், 4,474 தறிகள் இயங்கி வருகின்றன. இங்கு பணியாற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆண்டுதோறும், 'முத்ரா' கடன் திட்டத்தின் கீழ், தனி நபர் ஒருவருக்கு 50,000 ரூபாய் முதல், 1.20 லட்சம் ரூபாய் வரை, 20 சதவீதம் மானியத்தில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக கடன் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2023 -- 24ம் நிதி ஆண்டில், 625 நெசவாளர்களுக்கு, 6.20 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, 2024 -- 25ம் நிதி ஆண்டில், 984 நெசவாளர்களுக்கு, 9.60 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இறுதியாக, காஞ்சிபுரம் சரகத்தில் 2023 -- 24, 2024 -- 25 ஆகிய இரு நிதி ஆண்டுகளில், மொத்தமாக 1,609 நெசவாளர்களுக்கு, 15.8 கோடி ரூபாய், 'முத்ரா' திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டு உள்ளதாக கைத்தறித் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement