போலி கடன் செயலி மூலம் பணம் பறிப்பு வெளிநாட்டு மோசடி கும்பல் கைவரிசை
புதுச்சேரி: வெளிநாடுகளில் இருந்து போலி கடன் மொபைல் செயலி மூலம் புதுச்சேரி சேர்ந்தவர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிக்கும் செயலில் மோசடி கும்பல் களமிறக்கியுள்ளது.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்றவற்றில் உடனடி கடன் தருவதாக பல விளம்பரங்கள் வருகின்றன. பொதுமக்களும் உடனடியாக கடன் கிடைப்பதால், அச்செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து கடன் பெறுகின்றனர். இதன் மூலம் சைபர் குற்றவாளிகள் பதிவிறக்கம் செய்த செயலியை கொண்டு அவர்களின் புகைப்படம் மற்றும் மொபைல் எண்களை திருடி விடுகின்றனர்.
பின், தவணை தொகை கட்டும் தேதிக்கு முன்பாகவே கடன் வாங்கியவர்களுக்கு மர்ம நபர்கள் வாட்ஸ் ஆப் எண்களிலிருந்து தொடர்பு கொண்டு நீங்கள் கடன் பெற்ற தொகையை விட அதிக தொகையை இன்றே கட்ட வேண்டும் என, மிரட்டுகின்றனர். பணம் அனுப்ப வில்லை என்றால், புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டுகின்றனர்.
இதுபோன்று, புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு 100க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. விசாரணையில் இந்த சைபர் குற்றவாளிகள் பாகிஸ்தான், சீனா, கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து வாட்ஸ் ஆப் மூலம் மிரட்டுவது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
-
மிகுந்த நிதானத்துடன் துல்லியமாக நடந்த இந்திய ராணுவ தாக்குதல்
-
இந்தியாவுக்கு தக்க பதிலடி தரப்படும்: பாகிஸ்தான்
-
பாகிஸ்தானை ஏமாற்றி .. இரவோடு இரவாக நம் ராணுவம் 'அட்டாக்'
-
‛ஆபரேஷன் சிந்தூர்' இன்று காலை 10 மணிக்கு இந்திய ராணுவம் முழு விளக்கம்
-
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் தணியும்: டிரம்ப் நம்பிக்கை
-
உரிமை கோராத உடல்களை அடக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளாட்சிகளுக்கு ஆணையம் பரிந்துரை