போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி: போர்கால பாதுகாப்பு ஒத்திகையை முன்னிட்டு தலைமை செயலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நிலவி வருகிறது. போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும், இன்று போர்க்கால ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள கலெக்டரிடம் வீடியோ கான்பரன்சியில் உரையாடினர். புதுச்சேரி நடக்கும் ஒத்திகை நிகழ்ச்சி தொடர்பாக, தலைமை செயலகத்தில் நேற்று கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், கலெக்டர் குலோத்துங்கன் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒத்திகையின் போது, வான்வழி தாக்குதல் எச்சரிக்கை, சைரன் ஒலி எழுப்புதல், தாக்குதல் ஏற்படும் போது, தங்களை எப்படி பாதுகாத்து கொள்வது பற்றி, மக்களுக்கு பயிற்சிதர மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement