ராதா ஆங்கில  பள்ளியில் பட்டமளிப்பு விழா

புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளி ராதா ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

பள்ளி நிர்வாகி பரமானந்தம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பெர்லின் ஜெயக்குமார் வரவேற்றார். விழாவில் புதுச்சேரி மாநில சுயநிதி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மழலை வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார்.

ஆசிரியை மாலா, மாணவர்களின் சிறப்புகளை எடுத்துக் கூறினார்.விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியை மலர்கொடி, வனிதா, உமா ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியை ஸ்ரீகங்கா நன்றி கூறினார்.

Advertisement