தென் கிழக்கு ஆசியாவில் காணப்படும் 'மலாய் குருகு' பறவை முதன் முறையாக திருப்பூரில் அகப்பட்டது

திருப்பூர்,:தென் கிழக்கு ஆசியாவில் அதிகம் தென்படும் 'மலாய் குருகு' பறவை, முதன் முறையாக திருப்பூரில் தென்பட்டது; அவற்றை மீட்ட வனத்துறையினர், நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் விட்டனர்.திருப்பூர், நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்துக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, ஆண்டுக்கு, 186 வகை பறவையினங்கள் வந்து செல்கின்றன.
இதில், திருப்பூர், வீரபாண்டி கிராமம், காளி குமாரசாமி கோவில் அருகில், கொக்கு அடிபட்டு, வழி தவறி வந்து விட்டதாக, அப்பகுதி மக்கள், வனத்துறையினரிடம் தெரிவித்தனர்.திருப்பூர் ரேஞ்சர் சுரேஷ் கிருஷ்ணன் உத்தரவில் வன ஊழியர்கள், அந்த பறவையை உயிருடன் மீட்டு, முதலுதவி சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்தனர்.
அது, மலேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டுமே அதிகம் தென்படும் 'மலாயன் நைட் ெஹரான்' எனப்படும் பறவை என்பது தெரிய வந்தது. அதை, நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்துக்கு கொண்டு சென்று விட்டனர்.
இது குறித்து, ரேஞ்சர் கூறியதாவது:தமிழகத்தை பொறுத்தவரை மலாயன் குருகு பறவை, கடந்த, 2018ல், துாத்துக்குடியில் தென்பட்டது. கடந்தாண்டு (2024) மார்ச் மாதம், நீலகிரி மாவட்டம் குஞ்சப்பனை; மே மாதம், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி லாங்வுட் சோலை; 2024 டிச., மாதம் மதுரையில் தென்பட்டுள்ளது. தமிழகத்திற்கு வந்து செல்லும் அரிதான பறவையான இது, தற்போது, திருப்பூரில் முதன் முறையாக பறவை தென்பட்டுள்ளது.
பொதுவாக தெற்காசியா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, பறவைகள், அவ்வப்போது இனப்பெருக்கத்துக்காக திருப்பூர் நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்துக்கு வந்து செல்வது வழக்கம்; அந்த வகையில், மலாயன் குருகு பறவையும் வந்திருக்கலாம்; திருப்பூருக்கு அதன் வருகை அரிது; புதிது என்பது, காலநிலை மாற்றத்தை உணர்த்துவதாகவும் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
மிகுந்த நிதானத்துடன் துல்லியமாக நடந்த இந்திய ராணுவ தாக்குதல்
-
இந்தியாவுக்கு தக்க பதிலடி தரப்படும்: பாகிஸ்தான்
-
பாகிஸ்தானை ஏமாற்றி .. இரவோடு இரவாக நம் ராணுவம் 'அட்டாக்'
-
‛ஆபரேஷன் சிந்தூர்' இன்று காலை 10 மணிக்கு இந்திய ராணுவம் முழு விளக்கம்
-
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் தணியும்: டிரம்ப் நம்பிக்கை
-
உரிமை கோராத உடல்களை அடக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு உள்ளாட்சிகளுக்கு ஆணையம் பரிந்துரை