போதை மாத்திரையுடன் கேரள வாலிபர் கைது

பாலக்காடு:பாலக்காடு அருகே, ஒரு கிலோ போதை மாத்திரையுடன் வாலிபரை கலால் துறையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோவை - -கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், வாளையார், அட்டப்பள்ளம் சுங்கச்சாவடி அருகே நேற்று அதிகாலை, இன்ஸ்பெக்டர் ரினோஷ் தலைமையிலான, பாலக்காடு கலால் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கோவையில் இருந்து திருச்சூர் நோக்கி சென்ற, கேரள அரசு பஸ்சை நிறுத்தி நடத்திய சோதனையில், திருச்சூர் மாவட்டம், முகுந்தபுரம் தாலுகா நந்திகரை பகுதியைச் சேர்ந்த தீக் ஷித், 26, என்பவரிடமிருந்து ஒரு கிலோ எடை கொண்ட எம்.டி.எம்.ஏ., என்ற போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில், பெங்களூருவில் இருந்து, திருச்சூரில் விற்பனை செய்வதற்காக போதை மாத்திரை கடத்தி வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட தீக் ஷித்தை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement