அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு

கோவை : இரு மதத்தினர் இடையே கலவரத்தை துாண்டும் வகையில் பேசியதாக, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட மூவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின், 60வது பிறந்தநாளை முன்னிட்டு மணிவிழா பொதுக்கூட்டம் கோவை, ராஜவீதி தேர்நிலை திடலில், கடந்த ஏப்., 20ம் தேதி நடந்தது. இதில் பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், சங்கர், கணேஷ் பாபு ஆகியோர் கலவரத்தை துாண்டும் வகையில் பேசியதாக, போலீசார் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீசார் அதிகாரி ஒருவர் கூறுகையில், ' இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் 60வது பிறந்தநாளை கொண்டாட அனுமதி கேட்டு, கடந்த ஏப்., 14ம் தேதி மனு அளித்திருந்தார். விழாவின் போது, வேறு மதத்தினர் குறித்து அவதுாறாக பேசக்கூடாது; வெறுப்பு பேச்சு கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும், இரு மதங்களிடையே கலவரத்தை துாண்டும் வகையில் மூவர் பேசியுள்ளனர். மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

Advertisement