குறுவை நடவு பணி தீவிரம்

விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் குறுவை நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார், கோ.மங்கலம், எருமனுார், சின்னவடவாடி, எ.வடக்குப்பம், பெரியவடவாடி, விஜயமாநகரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் போர்வெல், கிணறு பாசனம் மூலம் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் குறுவை சாகுபடி செய்வது வழக்கம்.

அதேப் போன்று, நடப்பாண்டு போர்வெல், கிணறு பாசன விவசாயிகள், கடந்த இரண்டு வாரங்களாக குறுவை நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Advertisement