கார் உரிமையாளரை மிரட்டிய ஐவர் மீது வழக்கு

போத்தனூர், : கோவை, குனியமுத்தூரிலுள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் இளையராஜா, 39. இவர்தனது மாருதி வேகன் ஆர் காரை, பைசல் என்பவர் வாயிலாக ஹக்கீம் என்பவரிடம், 90 ஆயிரம் ரூபாய்க்கு இரு மாதங்களுக்கு முன், அடமானம் வைத்தார். ஒரு மாதத்திற்குப் பின், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து காரை திரும்ப கேட்டார்.

அப்போது ஹக்கீம், காரை அபு என்பவரிடம் கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து, கார் வெற்றி மற்றும் தவுபிக் ஆகியோரிடம் கை மாறியுள்ளது.

தன்னை ஏமாற்றுவதை அறிந்த இளையராஜா இதுகுறித்து கேட்டபோது, மிரட்டல் விடுத்தனர்.

இளையராஜா புகாரில், கரும்புக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement