'கொடை' யில் ஈஸ்வரம்மா நினைவு தினம்

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரி சாலையில் உள்ள ஸ்ரீ சத்யசாய் சுருதியில் ஸ்ரீ சத்யசாய் பாபாவின் அருள் அன்னை ஈஸ்வர அம்மாவின் 53வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

விழாவையொட்டி சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனா,கொடியேற்றத்துதல், வேத மந்திரத்துடன் சாய் பஜனைகள் நடந்தன.தொடர்ந்து மகாநாராயண சேவை எனும் அன்னதானம், வஸ்திரதானத்தை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

டி.வி.எஸ்., குழும தலைவர் வேணு சீனிவாசன், டாபே குழுமத் தலைவர் மல்லிகா சீனிவாசன், வி.எஸ்., இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் முரளி சீனிவாசன், டாடா ஹெல்த் கேர் முதன்மை நிர்வாக இயக்குனர் கிரீஸ் , சத்ய சாய் சேவா மாநில தலைவர் சுரேஷ், துணைத் தலைவர் விஜய கிருஷ்ணா , ஸ்ரீ சத்ய சாய் சேவா நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

ஏராளமான மக்கள் வரிசையில் காத்திருந்து ஸ்ரீ சத்ய சாய்பாபா அருள் அன்னையின் அருள் பிரசாதம் பெற்று சென்றனர்.தொடர்ந்து கர்நாடக தெய்வீக சங்கீத பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன.

Advertisement