வீரபாண்டி திருவிழாவில் கட்டுப்பாட்டு அறை துவக்கம்: எஸ்.பி., தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று துவங்கியதை முன்னிட்டு கோயில் உட்புறம் 24 மணி நேரமும் மூன்று ஷிப்ட் முறையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இக்கோயிலின் சித்திரை திருவிழா நேற்று (மே 6) துவங்கி மே 13 வரை நடக்கிறது. தினமும் 1.20 லட்சம் பேர் வந்து செல்வர், என்பதால் தேனி எஸ்.பி., சிவபிரசாத் கண்காணிப்பில் திண்டுக்கல் குழந்தைகள் நல பாதுகாப்புப் பிரிவு கூடுதல் எஸ்.பி., ரமேஷ், சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., ஜெரால்டு அலெக்சாண்டர், பெண்கள்,சிறார் நல பாதுகாப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி. சுகுமார், ஆகியோர் நேற்று பாதுகாப்புப் பணிகளை கண்காணித்தனர்.
தற்காலிக கட்டுப்பாட்டு அறையை எஸ்.பி., திறந்து வைத்தார். திருவிழா நாட்களில் தற்காலிக கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அலுவலராக மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயராஜலட்சுமி நியமிக்கப்பட்டு உள்ளார். கோயிலில் பெண் போலீசார் உள்பட 108 பேர் சுழற்சி முறையில் 3 ஷிப்ட்டில் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
கண்ணீஸ்வரமுடையார் படித்துறை, முல்லைபெரியாறு ஆற்றங்கரை பகுதிகளில் கண்காணிப்பில் போலீசார் ஈடுபட உள்ளனர். குற்றங்களை தடுக்க குற்றப்பிரிவு போலீசார் அடிக்கடி தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.
இதுதவிர தற்காலிக பஸ் ஸ்டாண்டில் இருந்து கோயில் வரை, பொழுது போக்கு பூங்கா அமைந்துள்ள ராட்டினம் அமைக்கப்பட்டு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர். இப்பாதுகாப்புப் பணிகளில்1010 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 18 இடங்களில் தற்காலிக டூவீலர், கார், டூரீஸ்ட் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும்
-
தேசிய அளவில் முதலிடம், உலகளவில் இரண்டாமிடம்: டிரெண்டிங்கில் ஆபரேஷன் சிந்தூர்
-
சீல், அட்டோ 3 கார்கள் புதுப்பிப்பு
-
இந்தியாவுடன் போரை ஆதரிக்காத பாக்., மக்கள் மவுலானா கேள்விக்கு மவுனமே பதில்
-
டொயோட்டா ஹைகிராஸ் எம்.பி.வி., 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பெஷல் எடிஷன்
-
காங்., பொதுக்கூட்டத்தை புறக்கணித்த தலைவர்கள் அகில இந்திய தலைமை அதிருப்தி
-
கள்ளழகரை பார்க்கும் இடங்களில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது சரிதானா அழகர்கோவில் பட்டர் சொல்வது என்ன