வெல்டிங் மெஷின் திருட்டு

ஆண்டிபட்டி: புள்ளிமான்கோம்பை அருகே நடுக்கோட்டையை சேர்ந்தவர் தெய்வேந்திரன் 35, அப்பகுதியில் குடும்பத்துடன் தங்கி கிரஷரில் மேலாளராக பணி செய்து வருகிறார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளூர் நபர்களும் கிரஷரில் வெல்டிங் வேலை செய்து வந்துள்ளனர். ஏப்ரல் 29ல் வெல்டிங் வேலை முடித்துவிட்டு மறுநாள் வந்த போது கிரஷரில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வெல்டிங் மெஷின், கட்டிங் மெஷின், கிரைண்டர் மெஷின், மற்றும் வெல்டிங், மின் ஒயர்கள் திருடு போயிருந்தது. தெய்வேந்திரன் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement