தேனி மாவட்டத்திற்கு மே 9, 12ல் உள்ளூர் விடுமுறை
தேனி: மாவட்டத்திற்கு மே 9, 12 ஆகிய இரு தினங்கள் உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார்.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இத்திருவிழாவின் தேர்திருவிழா மே 9ல் நடக்கிறது.
அதனை முன்னிட்டு மே 9ம், கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு மே 12 ஆகிய இருநாட்கள் உள்ளூர் விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிட்ட தினத்தில் தலைமை கருவூலம், சார்நிலை கருவூலங்கள் தேவையான பணியாளர்களுடன் செயல்படும். இந்த விடுமுறைகளை ஈடு செய்யும் வகையில் மே 17, 31 ஆகிய நாட்கள் மாற்று வேலை நாட்கள் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement