சிறார் திருமணங்களை தடுக்க சிறப்பு முகாம்

தேனி: மாநிலத்தில் அதிக சிறார் திருமணங்கள் நடைபெறும் மாவட்டங்களில் தேனி மாவட்டமும் ஒன்றாக உள்ளது. குறிப்பாக ஆண்டிபட்டி, போடி தாலுகாக்களில் அதிகம் நடக்கின்றன.

சிறார் திருமணங்களை கட்டுப்படுத்த கடமலைக்குண்டு ஒன்றியத்தில் சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் நலத்துறை, சமூக நலத்துறை, பள்ளிகல்வித்துறை, சுகாதாரத்துறை, விளையாட்டு மேம்பாட்டு அலுவலகம் இணைந்து நடத்த உள்ளனர். பள்ளிபடிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களை கண்டறிந்து முகாமில் பங்கேற்க வைக்க உள்ளனர். முகாம் மே கடைசிவாரத்தில் துவக்கி ஒருவாரம் நடக்கிறது. இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உணவு, தொழிற்கல்வி, விளையாட்டு பயிற்சி அளிக்கின்றனர். தொடர்ந்து பள்ளியில் சேர்க்க உள்ளனர்.

Advertisement