கிரிக்கெட்டில் மோதல் இளைஞர் கொலை

ஷிவமொக்கா :கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட மோதலில், இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

ஷிவமொக்கா மாவட்டம், பத்ராவதியின் ஹொசமனே லே - அவுட் பகுதியில் உள்ள மைதானத்தில் நேற்று முன்தினம் கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியின்போது, கேசவபுராவை சேர்ந்த அருண், 23, என்பவருக்கும், மற்றவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அன்று இரவு தன் நண்பர் சஞ்சய், 20, உடன் தான் குடியிருக்கும் பகுதியில் உள்ள குடிநீர் டேங்க் அருகில் அருண் மது குடித்துக் கொண்டிருந்தார். அங்கு மைதானத்தில் காலையில் பிரச்னை செய்த இருவர் வந்து தகராறு செய்தனர்.

இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில், அருணை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். தடுக்க வந்த சஞ்சய்க்கும் வெட்டு விழுந்தது.

இதுகுறித்து அப்பகுதியினர் போலீசில் புகார் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், படுகாயமடைந்த சஞ்சயை, மருத்துவமனையில் அனுமதித்தனர். அருணை கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement