'பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் விற்பனை செய்தால் புகார் அளிக்கலாம்'
கரூர்,
கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து, மையோனைஸ் விற்பனை செய்தால் புகார் அளிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
கிருமி நீக்கம் செய்யப்படாத, பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிக்கும் போது, பச்சை முட்டையில் இயல்பாகவே காணப்படும் சால்மோனெல்லா, லிஸ்ட்டீரியா போன்ற பாக்டீரியா கிருமிகள் மையோனைஸிலும் சேர்ந்து விடும்.
இதனால், அதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுபோக்கு, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸை தயாரிப்பது, தயாரித்தவற்றை இருப்பு வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறி, விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
உடல் நலனை பேணிகாக்க, நுகர்வோர்களும் தடை செய்யப்பட்டுள்ள கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸை தவிர்க்க வேண்டும்.
எனினும், மையோனைஸ் பிரியர்களுக்கு மாற்று தேர்வாக, கிருமி நீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையேனைஸ் சந்தையில் தொடர்ந்து கிடைக்கும்.
இதனை, தயாரித்து விற்பனை செய்ய, மத்திய உணவு பாதுகாப்பு உரிமத்தினை, https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இது தொடர்பாக, 94440- 42322 என்ற உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ்ஆப் வாயிலாக புகார்
அளிக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
தகர்த்தெறிந்த இந்தியா; பாக்., ட்ரோன்கள், ஏவுகணைகள் சிதறியது; புகைப்படம் ஆல்பம் இதோ!
-
இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் பாகிஸ்தானால் முடியாது; சசி தரூர்
-
முப்படை தளபதிகளுடன் மோடி சந்திப்பு!
-
பயங்கரவாத முகாம்கள் அழிப்பு; புதிய வீடியோ வெளியிட்டு ராணுவம் விளக்கம்!
-
ராணுவத்திற்கு உதவ தயார்; சண்டிகரில் குவிந்த இளைஞர்கள்!
-
அரசு பள்ளியில் சாதனை