ஆபரேஷன் சிந்தூர்: கடும் வீழ்ச்சியில் பாகிஸ்தான் பங்குச்சந்தைகள்!

இஸ்லாமாபாத்; இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தானின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
@1brபஹல்காம் சுற்றுலா பயணிகள் 26 பேரின் மரணத்துக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ தாக்குதல் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானுக்கும், அந்நாடு ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கங்களுக்கும் இந்தியா பாடம் புகட்டி உள்ளது.
மே 7 நள்ளிரவில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. ராணுவத்தின் இந்த அதிரடியால் இந்திய பங்குச்
சந்தைகள் எழுச்சியுடன் காணப்பட்ட அதே தருணத்தில், பாகிஸ்தானில் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தன.
கராச்சி பங்குச்சந்தையான கே.எஸ்.இ. (KSE 100).குறியீடு ஆரம்ப வர்த்தகம் 6.272 புள்ளிகள் சரிந்து 107, 007.68 ஆக சரிந்தது. நேற்றைய தினம் இதே பங்குச் சந்தை 113,568.51 என்ற புள்ளிகளில் நிறைவடைந்து இருந்தது. வங்கிகள், தொழில்துறை நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. முதலீட்டாளர்கள் அனைவரும் தங்கள் பங்குகளை திரும்ப பெற்றதால் கராச்சி பங்குச்சந்தைகளில் பெரும் சரிவு காணப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் பற்றி இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வ தகவல்களை புது டில்லியில் இருந்தபடியே வெளியிட்ட அடுத்த தருணமே பாகிஸ்தான் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (3)
Suresh sridharan - ,
07 மே,2025 - 16:14 Report Abuse

0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
07 மே,2025 - 14:59 Report Abuse

0
0
Reply
thehindu - ,இந்தியா
07 மே,2025 - 14:40 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஆலங்கட்டி மழையால் கொடியில் இருந்து உதிர்ந்த திராட்சை காய்கள்
-
நாளை தேரோட்டம் சின்னமனுாரில் விழாக்கோலம்
-
தொழிலாளி சந்தேக மரணம் உறவினர்கள் ரோடு மறியல்
-
பா.ஜ., வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
-
துடைப்பத்தால் தாக்கிக் கொண்ட மாமன், மைத்துனர்கள் ஆண்டிபட்டி அருகே நுாதன விழா
-
இரண்டு ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காமல் நிறுத்திவைப்பு
Advertisement
Advertisement