துடைப்பத்தால் தாக்கிக் கொண்ட மாமன், மைத்துனர்கள் ஆண்டிபட்டி அருகே நுாதன விழா

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி தாலுகா மறவபட்டி முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழாவில் மாமன் மைத்துனர் உறவுமுறை கொண்டவர்கள் துடைப்பத்தால், தாக்கிக் கொண்டு நுாதன முறையில் வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி நடந்தது.

பொங்கல் விழா 3 நாட்கள் நடந்தது. பக்தர்கள் பொங்கலிட்டு, அக்னிசட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நிறைவு நாளான நேற்று மாமன் மைத்துனர் உறவுமுறை கொண்டவர்கள் கோயில் முன், உடல் முழுவதும் சேறு பூசிக்கொண்டு கயிறுகளால் கட்டிக் கொண்டு ஒருவரை ஒருவர் துடைப்பதால் அடித்து மகிழ்ந்தனர். பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த நுாதன நிகழ்ச்சியில் பங்கேற்பதால் உறவு மேம்படுவதாக கூறினர்.

Advertisement