பயங்கரவாதி மசூத் அசார் வீடு தரைமட்டம்; குடும்பத்தினர் 10 பேர் பலி

39

புதுடில்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதி மசூத் அசாரின் சகோதரி மற்றும் உறவினர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இதனை அறிக்கை வாயிலாக மசூத் அசார் ஒப்புக்கொண்டுள்ளான்.


@1brபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை நடத்தி உள்ளது.
பாகிஸ்தானின் பஹாவல்பூரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் வீடு தரைமட்டமானது. அவனது குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


தனது குடும்பத்தில் 10 பேர் உயிரிழந்துவிட்டனர் என பயங்கரவாதி மசூத் அசார் அறிக்கை வாயிலாக ஒப்புக்கொண்டுள்ளான்.

யார் இந்த மசூத் அசார்?




* ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார். இவன் இந்தியாவிற்கு எதிராக சதி வேலைகளை செய்துள்ளான்.

* லஷ்கர் இ தொய்பா ஹபீஸ் சயீத் போல மசூத் அசாரும் இந்தியா தேடும் முக்கிய பயங்கரவாதி என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ., மற்றும் ராணுவத்தின் பாதுகாப்புடன் அவன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

* இந்திய உளவுத்துறை தொடர்ச்சியாக மசூத் அசார் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறது.


* கடந்த 2001ல் நம் பார்லிமென்ட் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், 2008ல் நடந்த மும்பை தாக்குதல் ஆகியவற்றில் மசூத் அசாருக்கு தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement