சங்க அலுவலக கட்டடம் திறப்பு
மதுரை: மதுரை ஆயிர வைசிய மஞ்சப்புத்துார் மக்கள் சமூகநலச் சங்க அலுவலகம், முத்தாலம்மன் மகளிர் மன்றம், கலைவாணி நுாலகம் ஆகியவற்றுக்கான கட்டடத் திறப்பு விழா நடந்தது.
தலைவர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். மகளிர் மன்றத் தலைவி வினோதா குத்துவிளக்கேற்றினார்.
சமூகநலச் சங்க செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார்.
துணைத் தலைவர் கஜேந்திரன் துவக்க உரையாற்றினார். புதிய கட்டடங்களை கவுரவ ஆலோசகர் அருணாச்சலம் திறந்து வைத்தார். எம்.ஏ.வி.எம்.எம்., சபை தலைவர் பாஸ்கரன், சமூகநல சங்க ஆலோசகர்கள் ராஜாராமன், மோகன சுந்தரம் பங்கேற்றனர்.
கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர் சொக்கலிங்கம் நுால்கள் காட்டும் வாழ்வியல் என்ற தலைப்பில் பேசினார். இணைச் செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement