மாணவர்களுக்கு பரிசளிப்பு

திருப்பரங்குன்றம்: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி கட்டடக்கலைத்துறை 30வது ஆண்டு நிறைவு விழா தலைவர் ஹரி தியாகராஜன் தலைமையில் நடந்தது.

முதல்வர் அசோக்குமார், துறைத் தலைவர் ஜினு கிச்லே முன்னிலை வகித்தனர். கலை கலைஞர்கள் சென்னை மகேஷ் ராதாகிருஷ்ணன், ஐதராபாத் முருகப்பன் பேசினர். கட்டடக்கலை மாணவர்களின் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. 'கேட்' தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற இக்கல்லுாரி மாணவர் ஜெயந்த் கிப்ட்ஸன் பாராட்டப்பட்டார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Advertisement