மே 10 - 14 வரை சுற்றுலா கலைவிழா

மதுரை: மதுரை மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மே 10 முதல் 14 வரை தமுக்கம் மைதானத்தில் கலை விழா நடக்கிறது.

சித்திரை பொருட்காட்சி நடந்து வரும் நிலையில் கலைபண்பாட்டுத்துறையுடன் இணைந்து தினமும் மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை பரதம், கிராமிய பல்சுவை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தினமும் இரவு 8:30 மணிக்கு மதுரை சிம்பொனி குழு, மதுரை மேஸ்ட்ரோ குழுவின் இன்னிசை நிகழ்ச்சி, எம்.எஸ்.டி.குழுவின் கரோக்கி இசை நிகழ்ச்சி, அரசு இசைக்கல்லுாரி மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சி, மதுரை பிரண்ட்ஸ் மெலடி குழுவின் திரைப்பட பாடல் நிகழ்ச்சி நடக்கிறது.

Advertisement